search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம்"

    நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. நகர செயலாளர் சின்னதம்பி வரவேற்றார். வடக்கு மாவட்ட பொருளார் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் பொங்கியண்ணன், விஜய கமல், ராஜா, தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர் களாக கட்சியின் மாநில அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ், மாநில ஆலோசனைக் குழு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசித்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க. கட்சியின் மாநில அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம் மோகன்ராஜ் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் 1974-ல் காவிரி ஒப்பந்தந்தை புதுப்பித்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    அ.தி.மு.க. பல துண்டுகளாக உடைந்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பு வந்தால் ஆட்சி இருக்காது என்ற நிலையில் மோடியின் தயவால் எடப்பாடி அரசு நீடிக்கிறது.

    பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. நமது வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளது. அதனை ஒருங்கிணைக்க கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைப்பவர்கள் தே.மு.தி.க. தொண்டர்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×